×

ஒரு ரூபாய் வரி கட்டினால் 29 பைசா தரும் ஒன்றிய அரசு: செந்தில் பாலாஜி காட்டம்

தொண்டாமுத்தூர்: கோவை மாவட்டம் குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சரும், திமுக மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:நிதி இல்லாமல் எந்த திட்டங்களும் துவங்கப்படுவதில்லை. தமிழகத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்று நேரடியாக முதல்வர் சென்று அதனை ஆய்வு செய்து நிதிகள் ஒதுக்கப்பட்டு திட்டங்கள் துவங்கப்படுகிறது. அந்த திட்டப்பணிகளையும் முதல்வரே ஆய்வு செய்து வருகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிய அரசிடம் ஒரு ரூபாய் வரி கட்டினால் 29 பைசா மட்டுமே நமக்கு தருவதைப் பற்றி கேள்வி எழுப்புவாரா? நிதியை சேர்த்து தர வேண்டும் என்று கேட்பாரா? 2014ம் ஆண்டு திமுக – காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் தற்போது 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேல் விற்பனை செய்யப்படுவது குறித்து ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்புவரா?’’ என்றார்.

Tags : EU government ,Senthil ,Katham ,DONDAMUTHUR ,SENTHIL BALAJI ,MINISTER ,DIMUKA ZONE MANAGER ,KOWAI DISTRICT KUNIMUTHUR ,TOLD ,Tamil Nadu ,Chief Minister ,
× RELATED புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயிலில்...