- தைப்பூச தெப்பம் திருவிழா
- புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோவில்
- பெரம்பூர்
- தெப்பம் திருவிழா
- புரசைவாக்கம் அருள்மிகு கங்காதரேஸ்வரர் கோவில்
- சென்னை
- தாய் பூசம்
- சமய விநாயகர்...
பெரம்பூர்: புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப திருவிழா நடைபெற்றது. சென்னை புரசைவாக்கம் அருள்மிகு கங்காதரேசுவரர் கோயிலில் தைப் பூசத்தை முன்னிட்டு 15ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தெப்ப திருவிழா நடைபெற்றது. இதையொட்டி முதல் நாளான நேற்று சமூக விநாயகர் தெப்பம், கற்பக விநாயகர் தெப்பம் மற்றும் வேத விநாயகர் தெப்பம் ஆகிய தெப்பங்களில் விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதைத்தொடர்ந்து 2ம் நாளான இன்று பங்கஜாம்பாள் உடனுறை கங்காதரேசுவரர் தெப்பமும் நாளை அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் தெப்பமும் நடைபெற உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் முல்லை, உதவி ஆணையர் புவனேஸ்வரி, திருக்கோயில் செயல் அலுவலர் ஆட்சி சிவப்பிரகாசம், அறங்காவலர் குழு உறுப்பினர் உதயகுமார், கோபிநாத், ரத்தினம், லீலாவதி, மேலாளர் தனசேகரன், எழுத்தர் வெற்றிவேலன் கலந்து கொண்டனர்.
