×

5வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

திருவனந்தபுரம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. பின்னர் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

Tags : New Zealand ,5th T20 ,Thiruvananthapuram ,Indian ,Indian team ,
× RELATED உலகின் நம்பர் 1 வீராங்கனையான...