- அனஹத் அமர்கலம்
- வாஷிங்டன்
- ஸ்குவாஷ் ஆன் பியர் ஓபன் ஸ்கு
- வீராங்கன்
- அனஹத் சிங்
- தென் ஆப்பிரிக்கா
- ஹேலி வார்டு வீரங்கன்
- ஜோடி ஓபன் ஸ்குவாஷ் போட்டிகளில்
- வாஷிங்டன், அமெரிக்கா
வாஷிங்டன்: ஸ்குவாஷ் ஆன் பையர் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் நேற்று, இந்திய வீராங்கனை அனாஹத் சிங், தென் ஆப்ரிக்கா வீராங்கனை ஹேலி வார்டை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஸ்குவாஷ் ஆன் பையர் ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 2வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை அனாஹத் சிங், தென் ஆப்ரிக்காவின் ஹேலி வார்டை எதிர்கொண்டார். இப்போட்டியின் துவக்கம் முதல் சூறாவளியாய் சுழன்றாடிய அனாஹத் முதல் இரு செட்களையும் 11-5, 11-8 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 3வது செட்டில் சுதாரித்து ஆடிய வார்ட், 14-12 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். இருப்பினும் 4வது செட்டில் வேகமெடுத்து ஆடிய அனாஹத், அந்த செட்டை 11-5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். இதன் மூலம் 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
* ஆடவர் பிரிவில் சோத்ரானி அபாரம்
ஆடவர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த உலகின் 49ம் நிலை வீரர், வீர் சோத்ரானி, பிரான்சை சேர்ந்த உலகின் 19ம் நிலை வீரர் பாப்டிஸ்ட் மசோட்டியை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டில் சிறப்பாக ஆடிய சோத்ரானி, 11-6 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். இருப்பினும் அடுத்த 2 செட்களும் 11-7, 11-8 என்ற புள்ளிக் கணக்கில் மசோட்டி வசம் சென்றன. அதன் பின் சுதாரித்து நேர்த்தியாக ஆடிய சோத்ரானி, அந்த இரு செட்களையும் 11-1, 11-9 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி, மசோட்டியை அதிர்ச்சி அடையச் செய்தார். இதன் மூலம் 3-2 என்ற செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். காலிறுதியில் இங்கிலாந்தை சேர்ந்த உலகின் 6ம் நிலை வீரர் டெக்லான் ஜேம்சை, வீர் சோத்ரானி எதிர்கொள்வார்.
