சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை தரமணியில் வெளி மாநில இளம்பெண், போதை ஆசாமிகளால் கொல்லப்பட்டுள்ளார். தடுத்த கணவனும், இரண்டு வயது குழந்தையும் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள். சென்னையில் உள்ள நந்தனம் அரசு கலைக்கல்லூரி கேண்டீனில் பணியாற்றும் அரியலூரை சேர்ந்த பெண் பாதிக்கப்பட்டுள்ளார். குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு போலீசை கண்டு பயமில்லாத நிலை இருப்பதற்கு ஆட்சியாளர்களின் செயல்பாடுகளே காரணம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
