சென்னை: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: வளசரவாக்கம் மண்டலம், போரூர் ஆற்காடு சாலை, சிஎம்ஆர்எல் தூண் எண் 246 அருகில் நீர்ப்பரிமாற்ற குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை காலை 06 மணி நாளை மறுநாள் காலை காலை 10 மணி வரை மண்டலம்-9 (தேனாம்பேட்டை)மயிலாப்பூர், நந்தனம், மண்டலம்-10 (கோடம்பாக்கம்)கே.கே நகர், ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர் நகர், நெசப்பாக்கம், சைதாப்பேட்டை, அசோக் நகர் மேற்கு மாம்பலம் , மண்டலம்-11 (வளசரவாக்கம்) வளசரவாக்கம், ஆலப்பாக்கம், சின்ன போரூர், ராமாபுரம், மண்டலம்-12 (ஆலந்தூர்) நத்தம்பாக்கம், ஆலந்தூர், முகலிவாக்கம், மணப்பாக்கம் மற்றும் மண்டலம்-13 (அடையாறு) கோட்டூர்புரம், இந்திரா நகர், பெசன்ட் நகர் திருவான்மியூர், தரமணி, வேளச்சேரி சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளது.
