சென்னை : சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். இன்றைய வழக்கு விசாரணையின் போது காவல்துறை தரப்பில், “காவல்துறை அதிகாரிகள், சிறுமியின் பெற்றோர் உள்ளிட்டோரிடம் ஆரம்பக் கட்ட விசாரணை நிறைவடைந்தது. சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
