- முதல்வர்
- மு. கே. பிப்
- ஸ்டாலின்
- தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்
- சென்னை
- தமிழக அமைச்சரவை
- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக அரசின் பட்ஜெட் கூட்டம் வருகிற பிப்ரவரி 2வது அல்லது 3வது வாரம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற இருப்பதால் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
