*மாவட்ட காவல்துறை தகவல்
கடந்த ஆண்டில் 209 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. சாலை விதிகளை மீறியதற்காக 1 லட்சத்து 67 ஆயிரத்து 337 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 1288 வழக்குகள் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும், 500 வழக்குகள் அதிவேகமாக இயக்கியதற்காகவும், 1331 வழக்குகள் அபாயகரமாக வாகனம் ஓட்டியதற்காகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக கடந்த ஆண்டு 1 லட்சத்து 67 ஆயிரத்து 337 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.12 கோடியே 12 லட்சத்து 45 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
நீலகிாி மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2025) பதிவு செய்யப்பட்ட வழங்குகளில் 85 சதவீதம் வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு 33 சொத்து வழக்குகள் தண்டனையில் முடிவுற்று எதிரிகளுக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உடல் சார்ந்த குற்றங்கள் தொடர்பாக 168 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து வழக்குகளிலும் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் 209 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. சாலை விதிகளை மீறியதற்காக 1 லட்சத்து 67 ஆயிரத்து 337 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 1288 வழக்குகள் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும், 500 வழக்குகள் அதிவேகமாக இயக்கியதற்காகவும், 1331 வழக்குகள் அபாயகரமாக வாகனம் ஓட்டியதற்காகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.12 கோடியே 12 லட்சத்து 45 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.
கடந்த ஆண்டில் பல்வேறு தொடர் குற்றங்களில் தொடர்புடைய 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 2024ம் ஆண்டு 245 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 295 எதிரிகள் கைது செய்யப்பட்டு 21.612 கிலோ கஞ்சா மற்றும் 0.065 கிராம் எம்டிஎம்ஏ என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டில் 337 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 355 எதிரிகள் கைது செய்யப்பட்டு 67.861 கிலோ கஞ்சா, 600 கிராம் மெத்தப்பட்டமைன், 0.055 கிராம் எம்டிஎம்ஏ மற்றும் 100 கிராம் ஹைட்ரோ கஞ்சா என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புைகயிலை பொருட்கள் மீதான 786 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 788 எதிரிகள் கைது செய்யப்பட்டு 1106.700 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ள சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக 1 வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1159 புகார் மனுக்களுக்கு ரசீது வழங்கப்பட்டது. பொதுமக்கள் இழந்த தொகையில் ரூ.50 லட்சத்து 71 ஆயிரத்து 237 மீட்கப்பட்டு இழந்தவர்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
மேலும், இந்த வருடம் சைபர் கிரைம் காவல் துறையினர் மற்றும் காவலர்கள் மூலம் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் நோக்கில் மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகள், பொது இடங்களில் 2941 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.
