- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- தில்லி
- விக்ரம் நாத்
- சந்தீப் மேதா
- என்.வி. அஞ்சாரியா
- தமிழக அரசு…
புதுடெல்லி: டெல்லி உட்பட நாடு முழுவதும் தெரு நாய் கடி சம்பவங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில்,‘‘தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 35000 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு காப்பகத்தில் சுமார் 120 நாய்கள் வரையில் வைக்கப்படும் வகையில் திறன் கொண்ட 72 நாய் காப்பகங்கள் மாநிலம் முழுவதும் அமைக்க ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டு இருந்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,”தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் ஒரு நாய் காப்பகம் கூட இல்லையா என்று கேள்வியெழுப்பினர். இதையடுத்து அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்,\\” இதுதொடர்பாக அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அனைத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
