×

ரயில் மோதி மூதாட்டி பலி

திருப்பூர், ஜன. 29: திருப்பூர்- ஊத்துக்குளி இடையே கேட்டுத்தோட்டம் பகுதியில் ரயில் மோதி 80 வயது மூதாட்டி உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே எஸ்.ஐ ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மூதாட்டி யார்? தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி உயிரிழந்தாரா? அல்லது ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tiruppur ,Tiruppur Railway Police ,Kettathottam ,Uthukuli ,Railway ,SI ,Rajendran ,
× RELATED காங்கயம் கரூர் சாலையில் பள்ளம்: சரி செய்ய கோரிக்கை