×

காங்கயம் கரூர் சாலையில் பள்ளம்: சரி செய்ய கோரிக்கை

காங்கயம், ஜன. 29: காங்கயம் கரூர் பிரதான சாலையில் கடந்த சில மாதங்களாக முத்தூர் பிரிவு அருகே குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம் நாளடைவில் ஆழமான குழிகளாக மாறி வருகிறது. சேதமடைந்த மேற்பரப்பு மற்றும் மழைக்காலத்தில் தேங்கும் நீர் காரணமாக பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த சாலை வழியாக தினமும் அதிகமான மக்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பயணம் செய்வதால், விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. எனவே சேதமடைந்த சாலையை உடனடியாக ஆய்வு செய்து சீரமைக்கும் நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Kangayam-Karur ,Kangayam ,Muthur ,
× RELATED அன்னதானம் வழங்கல்