- விருதுநகர்
- பிரேமலதா
- ஸ்ரீவில்லிபுத்தூர்
- பிரேமலதா விஜயகாந்த்
- தேமுதிக
- பொதுச்செயலர்
- சுவாமி
- ஆண்டாள் கோயில்
- ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகரில் போட்டியா என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்தார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி: அனைத்து கட்சிகளும் எங்களது தோழமைக் கட்சிகள்தான். எங்கள் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் யாருடன் கூட்டணி என்று விரும்புகிறார்களோ அவர்களோடு தான் நிச்சயம் எங்களது கூட்டணி இருக்கும். இவ்வாறு கூறினார். விருதுநகரில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, ‘‘முதலில் கூட்டணி முடிவாக வேண்டும். பிறகு நம்பர், தொகுதிகள் முடிவாக வேண்டும். அதன் பின்னர் யார் வேட்பாளர், எந்த தொகுதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்’’ என்றார்.
