விமான விபத்து காரணங்கள் என்னென்ன? விளக்கும் முன்னாள் விமான படை வீரர் செல்வ ராமலிங்கம்

சென்னை: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்து காற்றின் வேகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என முன்னாள் விமான படை வீரர் செல்வ ராமலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: விமானம் தரை இறக்கும் போது ஏற்படும் விபத்து தவிர்க்க முடியாத ஒன்று, திறமையான விமானியாக இருந்தாலும் இது ஏற்படும். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. குறிப்பாக விமானம் தரை இறக்கும் முன் காற்றின் வேகம், டயர் வெளியில் வரும் நேரம், தரை இறக்கும் கோணம் என அனைத்தும் கணக்கிடப்படும். இந்த விபத்து ஓடுபாதையை விட்டு விலகி, அதற்கு அருகில் ஏற்பட்டு உள்ளது, முக்கிய காரணமாக காற்றின் வேகம் கூறலாம், ஏனென்றால் இந்த லியர்ஜெட் 45 விமானம் மிகவும் பாதுகாப்பானது, விபத்துகள் பெரிய அளவில் ஏற்பட்டதில்லை.

கருப்பு பெட்டி கிடைக்கும் வரை ஒரு யூகமாக தான் கூறமுடியும். விமானத்தின் உள்ளே பைப் லைன் பாதிப்பு, இயந்திரம் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் கூட விபத்து நடக்கும். எரிபொருள் அதிகமாக இருந்தால் கூட அளவிற்கு கொண்டு வர வேண்டும் என வானில் அதிக நேரம் சுற்றும், இதற்கு கூட தரையிறக்காமல் சுற்றி இருக்கலாம், அப்போது விபத்து ஏற்படலாம். மேலும் குறைந்த பார்வை காரணமாகவும் இருக்கலாம். மகாராஷ்டிராவில் பெரிய அளவில் பனி இல்லை, அப்படி பனி இருந்து இருந்தாலும் ஓடுபாதையில் விளக்குகள் அதிக அளவில் இருக்கும் அது விமானிக்கு தரையிறக்க உதவியாக இருக்கும். கருப்பு பெட்டிகிடைத்த பின்தான் உண்மைவெளியில் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: