நெல்லை: கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத் செல்லும் சிறப்பு ரயிலை வரும் பிப்ரவரி மாதம் முழுமைக்கும் நீட்டித்து தென் மத்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது. தென் மத்திய ரயில்வே வரும் பிப்ரவரி மாதத்தில் சில ரயில்களை நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் கச்சிகுடா – மதுரை – கச்சிகுடா எக்ஸ்பிரஸ் இரு மார்க்கத்திலும் பிப்ரவரி மாதம் முழுவதும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. ஹைதரபாத் – கொல்லம் எக்ஸ்பிரசும் இரு மார்க்கத்திலும் பிப்ரவரி மாதத்தில் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
இதுபோல் ஹைதராபாத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரயில் (எண்.07230) வரும் பிப்ரவரி 4ம்தேதி முதல் வரும் 25ம்தேதி வரை புதன்கிழமை தோறும் 4 சர்வீசுகள் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
மறுமார்க்கமாக கன்னியாகுமரி – ஹைதரபாத் சிறப்பு ரயில் (எண்.07229) வரும் பிப்.6ம்தேதி முதல் பிப்ரவரி 27ம்தேதி வெள்ளிக்கிழமை தோறும் 4 சர்வீசுகள் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நாரசபூர் – திருவனந்தபுரம் சிறப்பு ரயிலும் இரு மார்க்கத்திலும் பிப்ரவரி மாதம் முழுவதும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
