கோவை: இஸ்லாமிய மக்களுக்கு 5 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு பெற்றுள்ள உலமாக்களுக்கு ரூ.5,000ஆக ஓய்வூதியம் உயர்வு. உலமாக்களுக்கு குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500ஆக உயர்த்தி வழங்கப்படும். இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
