- மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயில்
- சாமி
- மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயில்
- மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில்
- தென்னகட்டு துவரகா
- விஜயநகர் பேரரசு
திருவாரூர்: மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. தென்னகத்து துவாரகை என்று போற்றப்படும் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் பத்தாம் நூற்றாண்டு சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் விஜயநகர பேரரசு அச்சிதப்ப நாயக்கர் விஜயராகவன் நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டு 16 கோபுரங்கள் 24 சன்னதிகள் என 23 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரமாண்டமாக விளங்குகிறது. இங்கு மூலவராக வாசுதேவ பெருமாள் செண்பக லட்சுமி தாயாரும் உற்சவர் சுவாமிகள் ஆக ராஜகோபால சுவாமி செங்கமலத்தாயார் ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக திருப்பணி நடந்து வந்தன. இப்பணிகள் முடிந்ததை அடித்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஐந்து நாட்களாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. நான்காம் கால பூஜையை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் துவக்கி வைத்தார். இன்று காலை 5 ஆம் காலமாக பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு கடும் புறப்பாடு நடைபெற்றது. கணங்களில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ராஜகோபுரம் மற்றும் பிரகாரங்களில் உள்ள சன்னதிகள் ஆகியவற்றில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவர் ராஜகோபாலசாமி செங்கமலத்தாயார் சன்னதியில் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் தீபாரத்தை காட்டப்பட்டது மாநில தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் தஞ்சை திருவாரூர் நாகை திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்குக்கான ஏற்பாடுகள் அனைத்தும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருடர் சி இளவரசன் தலைமையில் செய்யப்பட்டிருந்தது.
