- விஜய்
- அஇஅதிமுக
- செங்கோட்டையன்
- முன்னாள் அமைச்சர்
- ஆர்.பி. உதயகுமார்
- மதுரை
- கு.பி.கிருஷ்ணன்
- தவெகா
- மாமல்லபுரத்தில்
மதுரை: அதிமுகவை கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்தபோது, செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர், மனசாட்சியை எங்கே அடகு வைத்தனர் என மாஜி அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார். மாமல்லபுரத்தில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய், அதிமுக ஊழல் கட்சியென கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இதுதொடர்பாக மதுரையில் ஆர்பி.உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசி இருப்பதாவது:
ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்து மக்களை சந்தித்து ஆசை வார்த்தை கூறுகிறார். யாருக்கும் ஆட்சேபனை இல்லை, ஆனால் 50 ஆண்டுகளுக்கும் மேலான கட்சியான அதிமுகவை கொச்சைப்படுத்தி, விமர்சனம் செய்யும் நிலையில், அந்த கட்சியில் அடைக்கலமாகியுள்ள முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் மனசாட்சியை எங்கே கொண்டு போய் அடமானம் வைத்தார்கள்?
இவர்கள் என்ன பதில் கூறினாலும் வருத்தமில்லை. எல்லோரை விட சிறந்த ஆட்சி செய்வோம் என்று கூறினாலும் வருத்தமில்லை. ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சேவைகளில் பங்கெடுத்தவர்களை இன்றைக்கு பக்கத்தில் வைத்துக் கண்டு, அதிமுகவிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து சொல்வதை இவர்கள் மனசாட்சி ஏற்றுக்கொள்கிறதா?
இன்றைக்கு கருத்து வேறுபாட்டால் சென்றவர்கள், காலத்தால் காணாமல் போய் விடுவார்கள். எடப்பாடிக்கு வலிமை சேர்க்கும் வகையில் டிடிவி தற்போது இணைந்துள்ளார். எத்தனையோ கசப்பான அனுபவங்கள், கருத்து வேறுபாடுகளை தள்ளி வைத்துவிட்டு அவர் இணைந்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா எடப்பாடி இதயத்தில் குடிகொண்டுள்ளது. இவ்வாறு பேசியுள்ளார்.
* ‘தவெகவை மிரட்ட முயற்சிக்குது பாஜ’
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நேற்று அளித்த பேட்டியில், கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழிசை சவுந்தர்ராஜன் பேசியிருப்பது அவர்கள் இந்த விஷயத்தில் இன்புளூயன்ஸ் செய்கிறார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை வைத்து மிரட்ட முயற்சிக்கிறார்கள் என தோன்றுகிறது. எங்களுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி. களத்தில் இல்லாதவர்கள் சொல்வதற்கெல்லாம் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது என்றார்.
