×

ஓபிஎஸ் இல்லாமயே எங்க கூட்டணி பலமா தான் இருக்கு.. நயினார் நாகேந்திரன் பேட்டி

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியளித்தார். ‘என்டிஏ கூட்டணியில் ஓபிஎஸ் இன்னும் இணையாதது பற்றி, உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்விக்கு, நயினார் நாகேந்திரன், பதில் ஏதும் கூறாமல் நடக்கத் தொடங்கினார்.

இதையடுத்து ‘‘உங்கள் கூட்டணியில், ஓபிஎஸ் இணைந்தால், கூட்டணி இன்னும் பலம் வாய்ந்ததாக இருக்குமா’’ என்ற கேள்விக்கு, ‘‘எங்கள் கூட்டணி இப்போதே, நல்ல பலம் வாய்ந்த கூட்டணியாக தான் இருக்கிறது’’, என்றார். ‘‘அப்படி என்றால், ஓபிஎஸ் கூட்டணிக்கு வரவில்லை என்றாலும், பிரச்னை இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா..’’ என்ற கேள்விக்கு, ‘‘அப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளக்கூடாது’’ என்றார்.

Tags : OPS ,Nainar Nagendran ,Chennai ,Tamil Nadu ,BJP ,Trichy ,Chennai airport ,NDA ,
× RELATED ஆசனூர் வனப்பகுதியில் காரை வழிமறித்து...