×

நாமக்கலில் லாரி, சரக்கு வாகனம் டூவீலர் மோதல்: 3 பேர் பலி

நாமக்கல்: திருச்சியில் இருந்து சாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் நேற்று காலை 6 மணியளவில், நாமக்கல் ரயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பெங்களூருவில் இருந்து நாமக்கல் வழியாக திருச்சி நோக்கி சென்ற லாரியும், சரக்கு வாகனமும் நேருக்கு நேராக மோதிக்கொண்டது. இதில் சரக்கு வாகனம் கவிழ்ந்து, அவ்வழியாக சென்ற டூவீலர் மீது மோதியது. இதில், டூவீலரில் சென்ற நாமக்கல் ஜெய் நகர் கார்த்தி (21), இந்திரா நகர் சேனாதிபதி (22) ஆகிய இருவரும், சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த உசேன் (27) என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டூவீலரில் வந்த மற்றொரு வாலிபரும், லாரியை ஓட்டி வந்த டிரைவரும் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் வந்து விபத்தில் சிக்கி உருக்குலைந்த லாரி, சரக்கு வாகனம், டூவீலர் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர். காலை 8 மணிக்கு பிறகு மேம்பாலம் வழியாக போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Tags : Namakkal ,Trichy ,Bengaluru ,
× RELATED ஓபிஎஸ் இல்லாமயே எங்க கூட்டணி பலமா தான்...