சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் (TNWESafe) சார்பில் நடைபெறும் இரண்டு நாள் உலக மகளிர் உச்சி மாநாடு – 2026ல் ஆற்றிய வரவேற்புரை:-
தமிழ்நாட்டு மகளிரினுடைய வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதை உறுதி செய்ய 5 ஆயிரம் கோடி ரூபாயில் Tamil Nadu WE Safe திட்டத்தை இன்றைய தினம் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, She Leads என்ற தலைப்பில் சர்வதேச மாநாடும் இன்றிலிருந்து தொடங்க இருக்கின்றது. இங்கே ஆயிரக்கணக்கான மாணவிகள், தாய்மார்கள், மகளிர் வருகை தந்துள்ளீர்கள். உங்களுடைய இந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் எப்போதும் தொடரவேண்டும். அதற்கு தான், நம்முடைய திராவிட மாடல் அரசு
பல்வேறு முன்னெடுப்புகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது. அதில் முக்கியமான ஒரு முன்னெடுப்பு தான் (initiative), இந்த Tamil Nadu We Safe திட்டம்.
Various studies have identified Chennai as the safest city for women in the country. Building on this achievement, the Dravidian Model Government is launching the TN WE Safe project today, to further enhance the safety, growth, and overall well-being of the women.
நம்முடைய தமிழ்நாடு அரசு மகளிர் முன்னேற்றத்திற்காக செயல்படுத்துகின்ற திட்டங்களைப் பார்த்து, உலக வங்கி இன்றைக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த சுமார் 1,250 கோடி ரூபாய் கடனுதவியாக தருகின்றார்கள்.
For the first time in India, the World Bank is supporting a state with major financial assistance for the development of women, across all age groups. On behalf of Tamil Nadu Government. On behalf of all the women here. I thank world bank for their support.
பிறக்கும் பெண் குழந்தைகள் தொடங்கி, பள்ளி கல்லூரி செல்லும் மாணவிகள், பணிக்குச் செல்கின்ற மகளிர், இல்லத்தரசிகள், வயதான பெண்மணிகள் என்று அனைத்து தரப்பு மகளிரினுடைய பாதுகாப்பையும் வளர்ச்சியையும் உறுதி செய்கின்ற வகையில் இந்த We Safe திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே, தமிழ்நாடு என்றால், மகளிர் நாடு என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி இருக்கின்றார். பெண்களுடைய சுமையை குறைக்கின்ற வகையில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பள்ளிக் குழந்தைகளுக்கான முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்.பெண்கள் உயர்கல்வியில் சேரும் வகையில் அந்த எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்துவதற்கு தான் முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த திட்டம், புதுமைப்பெண் திட்டம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவுகின்ற வகையில், முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த திட்டம், விடியல் பயணம் திட்டம். கல்லூரியில் படிக்கின்ற பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகின்ற திட்டம் நான் முதல்வன் திட்டம். வேலைக்காக, கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு நிறைய மகளிர் வருகிறார்கள். அப்படி வரும்போது அவர்கள் பாதுகாப்பாக தங்கவேண்டும் என்று கொண்டுவரப்பட்ட திட்டம் தான் ‘தோழி விடுதி’ திட்டம்.
We are proud to note that nearly 42 percent of the country’s female factory workers are from our state Tamil Nadu. With this TN We Safe initiative, we expect this percentage to increase further.
வீட்டில் காலையில் இருந்து இரவு வரைக்கும் 24 மணி நேரமும் உழைக்கின்ற தாய்மார்கள். அவர்களுடைய உழைப்பை யாரும் பொருட்படுத்தவே இல்லை. முதன் முதலாக அங்கீகரித்தது நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தான். அதற்காக அவர் கொண்டுவந்த திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டத்திற்கு முதலமைச்சர் அவர்கள் தான் பெயர் வைத்தார். மாதம் 1,000 ரூபாய் என்பது ஏதோ சலுகைத் தொகை கிடையாது. அது பெண்களுடைய உழைப்பை அங்கீகரிக்கின்ற ‘உரிமைத்’ தொகை.
Through such initiatives, the progress of women will be taken to the next level. This two-day conference is aimed at achieving that.
இது மாதிரியான திட்டங்களால் தமிழ்நாட்டினுடைய திராவிட மாடல், இன்றைக்கு இந்தியாவிற்கே ரோல் மாடல் அரசாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
