×

நாங்கள் கூட்டணி பேசுகிறோம் என்று தெரிந்தால் டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள் :தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி

கோவை : யாருடன் கூட்டணி எனப் பேசினாலே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள் என்று தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன்,” தவெகவுடன் கூட்டணிக்கு வர வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நினைத்தார். சூழ்நிலை காரணமாக டிடிவி தினகரனால் எங்கள் கூட்டணிக்கு வர முடியவில்லை. தினகரனுக்கு ஏற்பட்ட சூழ்நிலை குறித்து என்னால் கூற இயலாது, எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.

டிடிவி தினகரன் ஒரு நாளுக்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார். நாங்கள் கூட்டணி பேசுகிறோம் என்று தெரிந்தால் டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து நாங்கள் சொல்லாமல் இருப்பது நல்லது. பாமக ராமதாஸ் தவெகவுடன் பேசியதாக செய்தி பார்த்தேன், நல்லது நடக்கட்டும்.நான் எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு பயணம் செய்தவன், சிறப்பான முறையில் ஆட்சியில் பங்கு கொண்டவன். என் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு உச்சநீதிமன்றம் வரை தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நான் தூய்மையானவன் என்பதற்கு உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது.”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Delhi ,Taweka Sengkottiaan ,KOWAI ,DAVEGA CHENGOTTAYAN ,Goa Airport ,Sengotayan ,Daveka ,General Secretary of State ,DTV ,
× RELATED அறைக்குள் அரசியல் செய்யும் கட்சி...