- காங்கிரஸ்
- சசிகாந்த் செந்தில்
- சென்னை
- திருவள்ளூர் வடக்கு
- தெற்கு
- திருவள்ளூர்
- சசிகாந்த்
- கொளத்தூர், சென்னை
சென்னை: திருவள்ளூர் வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அந்த இருவரையும் பதவி நீக்கிவிட்டு கட்சிக்கு உழைத்தவர்களுக்கு பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை கொளத்தூரில் உள்ள திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் வீட்டை நேற்று முன்தினம் காங்கிரஸ் நிர்வாகிகள் முற்றுகையிட்டனர். அப்போது விதிகளுக்கு புறம்பாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வடக்கு மாவட்ட தலைவர் அரசு வழக்கறிஞர் சசிகுமார், தெற்கு மாவட்ட தலைவர் கங்கை குமார் ஆகியோரை பதவி நீக்கம் செய்துவிட்டு புதிதாக மாவட்ட தலைவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இதுகுறித்து மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பதாக உறுதி அளித்ததை ஏற்று காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர், ஏற்கனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோருக்கும் அவர்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
