தஞ்சை: திமுக மகளிரணியினர் ராணுவப் படையை போல திரண்டுள்ளனர். தஞ்சை மண் திராவிட இயக்கத்தின் கோட்டை என தஞ்சை வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். மேலும் ‘ராஜராஜ சோழன் ஆட்சி செய்த சோழர்களின் மண் தஞ்சை. பெரிய கோயிலும், கல்லணையும் நிலைத்து நிற்கும் மண் இது. கலைஞர் மட்டுமல்ல நானும் டெல்டாக்காரன் தான்.பெண் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தார் பெரியார். பெண்கள் கேட்காமல் அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. பெண்கள்தான் எப்போதும் பவர் ஹவுஸாக இருக்கிறார்கள். அரசின் திட்டங்களை பரப்புரை செய்யும் பணிகளை பெண்களிடம்தான் ஒப்படைத்துள்ளோம். தேர்தல் பரப்புரையின் முன்கள வீராங்கனைகளாக மகளிரணியினர் இருக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூச்சமில்லாமல் பொய் பேசிவிட்டு சென்றுள்ளார் பிரதமர். இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான். பாஜக ஆளும் மணிப்பூரில் 260 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூரில் ஏன் பாஜகவால் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை.. இதுதான் லட்சணமா?, பாஜக ஆளும் 2 மாநிலங்களில் இருந்துதான் இந்தியா முழுமைக்கும் போதைப் பொருள் விநியோகிக்கப்படுகிறது’ எனவும் உரையாற்றினார்.
பெண்கள்தான் எப்போதும் பவர் ஹவுஸாக இருக்கிறார்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- முதல் அமைச்சர்
- மு. கே. ஸ்டாலின்
- தஞ்சை
- திமுகா
- ஸ்ரீ நரேந்திர மோடி
- தமிழ் பெண்கள் மாநாடு
- தஞ்சயா
- தஞ்சை மன் திராவித இயக்கம்
- கே. ஸ்டாலின்
- சோஜர்ஸ்
- ராஜராஜ சோழான்
