×

எடப்பாடியுடன் டிடிவி கூட்டணி வெட்ககேடு: அமைச்சர் ரகுபதி சாடல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி: தே.ஜ.கூட்டணி என்பது அதிமுகவின் ஒரு பகுதியும், அதேபோல பாஜவும் இணைந்ததை தவிர அதை நாங்கள் வலுவாக பார்க்கவில்லை. அது பலவீனமான கூட்டணி. தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை ஒவ்வொரு சர்வே மூலமாக நாங்கள் அறிந்து வருகிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும், அதன் மூலமாக தங்களுக்கு இன்னும் பல நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு மக்களுடைய விருப்பம்.

கிரைம் மாபியா, கரப்ஷன் எல்லாம் பிரதமர் மோடியின் கட்சிக்கும், அவர்களது கூட்டணிக்கும் தான் பொருந்துமே தவிர எங்களுக்கு ஒரு துளியும் பொருந்தாது. 11 முறை தேர்தலில் தோல்வியடைந்த எடப்பாடிக்கு, 12வது தோல்வியை 2026 நிச்சயமாக தரும். எடப்பாடி பழனிசாமியை மிக கடுமையாக டிடிவி தினகரன் விமர்சனம் செய்து பேசிவிட்டு மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது வெட்கக்கேடு. திமுக வெற்றிக்கான கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : TTV ,Edappadi ,Minister ,Raghupathi Sadal ,Pudukottai ,Raghupathi ,NDA ,AIADMK ,BJP ,Tamil Nadu ,
× RELATED குடியரசு தின விழாவை முன்னிட்டு...