×

அதிபர் டிரம்பின் செயல்பாடுகளால் புதிய ஒழுங்கை நோக்கி நகரும் உலக அரசியல்: கூட்டாளிகள் எதிராளிகளாக மாறுகின்றனர்

வாஷிங்டன்: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போரும் அதன் பிறகு, காசா மீதான இஸ்ரேலின் படையெடுப்பும் புவிசார் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தின. இந்த சூழலில் அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான அமெரிக்க வெளியுறவுக் கொள்கையையும், பெரும்பாலான மேற்கத்திய உலகத்தை நிர்வகித்து வந்த விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை அழிப்பதில் உள்ள மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

பல போர்களை நிறுத்தியதாக கூறும் டிரம்ப், வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் மதுரோவை கைது செய்து நாடு கடத்தினார். வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை அபகரித்தார். அடுத்ததாக டென்மார்க் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற திட்டமிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளையும் பகைத்துக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக ஐரோப்பிய நாடுகள் மீது 10 சதவீத வரி விதித்த டிரம்ப் பின்னர் அதை திரும்ப பெற்றாலும் சமீபத்தில் நடந்த உலக பொருளாதார மன்ற மாநாட்டில் ஐரோப்பிய நாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
காசா அமைதி ஒப்பந்தம் என்ற பெயரில் ஐநாவுக்கு போட்டியாக ஒரு அமைப்பை உருவாக்க முயற்சிக்கிறார். கிரீன்லாந்து விவகாரத்தில் மொத்தமாக நேட்டோ அமைப்பிற்கு முடிவு கட்ட நினைக்கும் டிரம்ப், காசா அமைதி ஒப்பந்தத்தில் இருந்து அண்டை நாடான கனடாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை வாபஸ் பெற்றுள்ளார்.

அந்நாட்டின் அதிபர் மார்க் கார்னேவுடன் அதிபர் டிரம்ப் வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளார். இதே போல ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போரில் நேட்டோவில் இல்லாத இங்கிலாந்து, டென்மார்க் படைகளை கேவலப்படுத்தி உள்ளார்.

வெனிசுலாவைத் தொடர்ந்து ஈரானின் உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்க அந்நாட்டின் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவத்தை குவித்துள்ளார். சொந்த விருப்பு வெறுப்புகளை வைத்து ஆட்சி நடத்தும் டிரம்பின் இத்தகைய செயல்பாடுகள் நாம் புதிய ஒழுங்கிற்குள் உலக அரசியல் நுழைவதை காட்டுவதாக குடியரசுக் கட்சி செனட்டர் லிசா முர்கோவ்ஸ்கி கூறி உள்ளார்.

Tags : President Trump ,Washington ,Russia ,Ukraine ,Israel ,Gaza ,Donald Trump ,US ,World War II ,
× RELATED பிப்ரவரி 12ம் தேதி தேர்தல் நடக்கும்...