×

ஆப்கனில் கடும்பனி, மழைக்கு 61 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தான் முழுவதும் கடந்த மூன்று நாட்களில் பெய்த கனமழை மற்றும் கடும் பனியில் சிக்கி 61 பேர் பலியாகி விட்டனர். ஆப்கன் முழுவதும் கடும் பனிப்பொழிவு மற்றும் கன மழை பெய்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் 61க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பல இடங்களில் சாலைகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகளை செய்ய முடியாமல் அதிகாரிகள் தடுமாறி வருகிறார்கள்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் யூசுப் ஹம்மாத் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் 15 மாகாணங்களில் 458 வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கப்பட்டுள்ளன, நூற்றுக்கணக்கான விலங்குகள் இறந்துள்ளன. மாகாணங்களிலிருந்து அதிகாரிகள் கூடுதல் தகவல்களைச் சேகரித்ததால், எண்ணிக்கை மாறக்கூடும்’ என்று அவர் கூறினார்.

Tags : Afghanistan ,Kabul ,
× RELATED பிப்ரவரி 12ம் தேதி தேர்தல் நடக்கும்...