- எங்களுக்கு
- நியூயார்க்
- விஜய் குமார்
- அட்லாண்டா
- ஜோர்ஜியா
- மீமூ டோக்ரா
- கௌரவ் குமார்
- நிதி சந்தர்
- ஹரிஷ் சந்தர்
நியூயார்க்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண தலைநகர் அட்லான்டாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விஜய குமார்(51) மனைவி மீமு டோக்ரா(43) மற்றும் 12 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இவரது உறவினர்கள் கவுரவ் குமார்(33), நிதி சந்தர்(37) மற்றும் ஹரிஷ் சந்தர்(38) ஆகியோர் 7 மற்றும் 10 வயதுடைய குழந்தைகளுடன் லாரன்ஸ்வில்லி நகரில் உள்ள புரூக் ஐவி கோர்ட் பகுதியில் வசித்து வந்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலை விஜயகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் தங்கள் குழந்தையுடன் புரூக் ஐவி கோர்ட் பகுதியில் வசிக்கும் உறவினர்கள் வீட்டுக்கு சென்றனர்.
அங்கே சென்ற பிறகும், விஜயகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், விஜயகுமார் தன் மனைவி மற்றும் உறவினர்கள் 3 பேரையும் சுட்டு கொன்றார். இதைப்பார்த்த விஜயகுமாரின் 12 வயது குழந்தை 911 என்ற எண்ணை தொடர்பு கொண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. பின்னர் அங்கிருந்த அலமாரிக்குள் 3 குழந்தைகளும் அச்சத்துடன் ஔிந்து கொண்டனர். உடனே சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், விஜயகுமாரை கைது செய்தனர்.
