நாமக்கல்லில் டயாலிசிஸ் சிகிச்சை மையம் துவக்கம்

நாமக்கல்,  ஜன.29: நாமக்கல் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலம் அருகில்,  எஸ்ஜேஎல்டி வளாகத்தில்  யுனைடெட் வெல்பேர் டிரஸ்ட் மற்றும் ரோட்டரி கிளப்  இணைந்து, குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 7 படுக்கை வசதிகளுடன்  கூடிய டயாலிசிஸ் சிகிச்சை மையத்தை அமைத்துள்ளனர். நேற்று இந்த மையத்தை, கலெக்டர் மெகராஜ் திறந்து வைத்தார். பாஸ்கர் எம்எல்ஏ தலைமை வகித்தார். கேகேபி டெக்ஸ்டைல்ஸ் சின்னுசாமி  வரவேற்றார். மாவட்ட ரோட்டரி கவர்னர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க முன்னாள் கவர்னர்கள் கார்த்திகேயன், நடேசன்,  கோவிந்தராஜ், டாக்டர் குழந்தைவேலு, நாமக்கல் ரோட்டரி சங்க தலைவர்  விஜயகுமார் குத்துவிளக்கேற்றினர். நிகழ்ச்சியில் ரோட்டரி  சங்க கவர்னர் (தேர்வு) சரவணன், உதவி கவர்னர் பாஸ்கர், முன்னாள் உதவி  கவர்னர்கள் பன்னீர் செல்வம், சரவணன், செல்வரத்தினம், மீனா கேஸ் நிர்வாக  இயக்குனர் நல்லுசாமி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் டிவிஷனல் மேனேஜர்  பன்னீர்செல்வம், யுனைடெட் வெல்பேர் டிரஸ்ட் இயக்குனர்கள் பாமா ரங்கநாதன்,  நடராஜன், சின்னுசாமி, சுரேஷ், தயாளன், ஜெகதீசன், அபுபக்கர் உள்ளிட்ட பலர்  கலந்து

கொண்டனர்.

Related Stories: