×

விபி ஜி கிராம் ஜி என சொன்ன ராகுல் ராமர் மீதான காங்கிரசின் வெறுப்புணர்வு பிரதிபலிக்கிறது: பாஜ தாக்கு

புதுடெல்லி: “விபி ஜி ராம் ஜி சட்டத்தை விபி கிராம் ஜி என ராகுல் சொல்லியது ராமர் மீதான காங்கிரசின் வெறுப்பை காட்டுகிறது” என பாஜ சாடி உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் தற்போது விபி ஜி ராம் ஜி திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் மாநாட்டில் அண்மையில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, புதிய விபி ஜி ராம் ஜி திட்டத்தின் பெயரை என்னால் நினைவில் கொள்ள முடியவில்லை.

அதனால் அதை நான் விபி கிராம் ஜி என அதை நான் நினைவில் கொள்வேன்” என தெரிவித்திருந்தார்.
ராகுலின் பேச்சுக்கு பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் சுதன்ஷூ திரிவேதி கூறுகையில், “ராமர் மீது இவ்வளவு வெறுப்புடன் இருக்கும் காங்கிரசுக்கு மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை உரிமை கோர முடியாது. காந்தியின் கடைசி வார்த்தை ராம். ராகுல் காந்தியின் பேச்சு ராமர் மீதான காங்கிரசின் வெறுப்புணர்வு, அவமதிப்பு, அலட்சித்தை பிரதிபலிக்கிறது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : Rahul ,VP ,Congress ,Ram ,BJP ,New Delhi ,
× RELATED பலரும் கோரியுள்ளதால் ஆய்வு...