மரக்காணம் பகுதியில் ஸ்மார்ட் போன் தருவதாக மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்

மரக்காணம், ஜன. 29:  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கடந்த இரண்டு வாரத்துக்குமுன் சிலரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பை எடுத்தபோது மறுமுனையில் பேசிய நபர், உங்களது செல்போன் எண்ணுக்கு 2 கிராம் தங்கம் பரிசாக விழுந்துள்ளது என்று கூறி நீங்கள் பார்சல் செலவுக்கு ரூ.600 மட்டும் செலுத்தி உங்கள் பரிசான இரண்டு கிராம் தங்கத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி செல்போனை துண்டித்துள்ளார். ரூ.600 செலுத்தி அந்த பார்சலை பிரித்தபோது அதில் தங்க நிறத்தில் 4 வளையல்கள் இருந்துள்ளது.  இது குறித்து மரக்காணம் மேலவீதியைச் சேர்ந்த சையத்ஹமீத் என்பவர் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

 இதே பாணியில் கடந்த 3 நாட்களுக்கு முன் எங்கள் நிறுவனத்தின் மூலம் நடத்திய குலுக்கலில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் பரிசாக விழுந்துள்ளது. நீங்கள் ரூ.2500 மட்டும் செலுத்தி வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். அவர்கள் கூறியது போல் பார்சலை ரூ.2500 செலுத்தி பிரித்து பார்த்தபோது அதில் காய்கறிகள் வெட்டும் கருவி இருந்துள்ளது. இதுபோல் பாதிக்கப்பட்டவர்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வருகின்றனர்.

Related Stories: