- TTV
- ஜெயலலிதா…
- எடப்பாடி
- சென்னை
- எடப்பாடி பழனிசாமி
- TTV.thinakaran
- ஜெயலலிதா
- மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம்
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- தமிழ்நாடு…
சென்னை: நானும், டிடிவி.தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் கூட்டணி வலிமையான வெற்றிக் கூட்டணி. தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம். மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும். நானும் டிடிவி.தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள். ஜெயலலிதா விட்டுச்சென்ற பணியை தொடர உள்ளோம். எங்களுக்கு மனகசப்புகள் இருந்தன. அவை அனைத்தையும் மறந்து ஒன்றாக பயணிக்கிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. இருவரும் ஒன்றாக பயணிப்போம், பரப்புரை செய்வோம். திமுக ஆட்சியில் தினம் ஒரு போராட்டம் நடைபெற்று வரும் அளவுக்கு சீர்கெட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். எடப்பாடி பேட்டி அளிக்கும்போது டிடிவி.தினகரன், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக (அ) தலைவர் அன்புமணி ஆகியோர் உடனிருந்தனர்.
