×

இது மூணு சக்கர தேரு விளம்பரம் தந்து பாரு… ஆட்டோவுக்கு ரிசர்வேஷன்!

 

மதுரை நகர், புறநகரில் மட்டுமே 10 ஆயிரம் ஆட்டோக்கள் வரை வலம் வருகின்றன. இந்த ஆட்டோக்களின் பின்புறம் விளம்பரம் செய்ய மாதந்தோறும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் காலத்தில் கூடுதல் வசூலிப்பும் உண்டு.

வரும் சட்டசபை தேர்தலைக் குறிவைத்து கட்சிகள், சுயேச்சைகளின், ‘உங்கள் வாக்கு, எங்கள் சின்னத்திற்கே’ தேர்தல் விளம்பர எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. சந்து பொந்து என எங்கெங்கும் ஆட்டோக்கள் வலம் வரும் என்பதால் இதில் போடும் விளம்பரம் அத்தனை பேரிடமும் சென்று சேர்வதுடன், தொகுதியைத் தேர்ந்தெடுத்து அந்தந்த பகுதியினருக்கான வாக்குறுதிகளுடனும் பிளக்ஸ் பேனர் பொருத்தும் வாய்ப்பு கருதியும், சுவர் விளம்பரங்களை விடவும் இந்த மொபைல் ஆட்டோ விளம்பரம் கூடுதல் பயனளிக்கும் என்பதாலும் இந்த வாகனங்களுக்கான மவுசு எகிறி இருக்கிறது.

பெரும்பாலும் ஆட்டோக்கள் குறிப்பிட்ட கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்களின் பொறுப்பிலும், சில ஆட்டோகாரர்கள் குறிப்பிட்ட கட்சிகளிலும் இருப்பதால், இவ்வகையிலும் இப்போதே தங்கள் கட்சிக்கான விளம்பரத்திற்கான உறுதி பெறப்பட்டிருக்கிறது. சொந்த ஆட்டோக்காரர்கள், வாடகை ஆட்டோக்களின் உரிமையாளர்களைச் சந்தித்தும் இந்த ‘ரிசர்வேசன்’ பல்வேறு இடங்களிலும் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. தேதி அறிவிப்போ, வேட்பாளர் பட்டியலோ வராத நிலையிலும் கூட முதல் கட்டமாக கட்சிகளின் வாக்குறுதிகளை மையப்படுத்தி வாகனங்களில் பிளக்ஸ் பிரசாரம் செய்வதெனவும், அடுத்தடுத்து வேட்பாளர்களின் பெயர் தாங்கி, ஓட்டுக் கேட்பதாக மாற்றுவதெனவும் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.

Tags : Madurai ,
× RELATED பனையூரில் விஜய் நேர்காணல் 60...