×

எடப்பாடி சொந்த ஊரில் சேப்டிக்காக தொகுதியை குறிவைக்கும் தாமரை

 

சேலம் மாவட்டத்தில் சங்ககிரி தொகுதியில் காங்கிரஸ் 2 முறை, திமுக 6 முறை, அதிமுக 8 முறை வென்று உள்ளது. வரப்போகும் ேதர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட பாஜ ஆர்வம் காட்டி வருகிறது. அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் இதற்காக காய்நகர்த்தி வருகிறார். இதுகுறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘‘அதிமுக கூட்டணியில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட பாஜ மாநில துணைத்தலைவர்களான வி.பி.துரைசாமியும், கே.பி.ராமலிங்கமும் காய்நகர்த்தி வருகின்றனர். இதில் திருச்ெசங்கோடு தொகுதி என்பது கே.பி.ராமலிங்கத்தின் முதல் சாய்ஸ்சாக இருந்தது.

தற்போது திமுக கூட்டணி வசமுள்ள இந்த தொகுதியில் நின்றால் ஜெயிப்பது கஷ்டம் என்ற களநிலவரத்தை மூத்தநிர்வாகிகள் அவரது காதுக்கு ெகாண்டு சென்றுள்ளனர். அதேபோல் அங்கு கோஷ்டி மோதல்களும் பலமாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரில் ஒரு தொகுதியில் (சங்ககிரி) நிற்பதே தனக்கு பாதுகாப்பு என்று அவர் கருதுகிறார். மேலும் அவர் சார்ந்த சமூக மக்களும் சங்ககிரி தொகுதியில் அதிகளவில் உள்ளனர்.

அதேநேரத்தில் எடப்பாடியின் மைத்துனர் வெங்கடேஷ், இந்த தொகுதியில் வசித்து, தனிஆவர்த்தனம் நடத்தி வருகிறார். முடிந்தால் தான் போட்டியிட வேண்டும். அல்லது தனது தீவிர விசுவாசிகள் யாரையாவது நிறுத்த வேண்டும் என்ற ஆவலில் வெங்கடேஷ் உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் 8 முறை வெற்றி பெற்ற இந்த தொகுதியை பாஜ மாநில துணைத் தலைவருக்கு அதிமுக ஒதுக்குமா? என்பது கேள்விக்குறி தான். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Thamarai ,Edappadi ,Congress ,Sangakiri ,Salem district ,DMK ,AIADMK ,BJP ,vice-president ,K.P. Ramalingam… ,
× RELATED பனையூரில் விஜய் நேர்காணல் 60...