கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது: பிப்.1ல் தேரோட்டம்

 

கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிப்.1ல் தேரோட்டம் நடக்கிறது. தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகம், திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காளசாந்தி பூஜை, மற்ற பிற கால பூஜைகள் நடந்தன. இதையடுத்து 6.30க்கு மேல் கழுகாசலமூர்த்திக்கு முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றபட்டது.

தொடா்ந்து, கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவற்றிற்கு 18 வகையான மூலிகை பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவினை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச திருத்தேரோட்டம் பிப்.1ம் தேதி (ஞாயிறு) நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், மற்றும் கோயில் ஊழியர்கள் சீர்பாத தாங்கிகள் செய்துள்ளனர்.

Related Stories: