×

சென்னை-கன்னியாகுமரி சிறப்பு ரயில் இயக்கம்

 

மதுரை: குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: குடியரசு தினத்தையொட்டி இன்று (ஜன.23ம் தேதி) இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், நாளை மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறு மார்க்கத்தில் அங்கிருந்து ஜன.26ம் தேதி இரவு 9.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை பீச் சென்றடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாகச் செல்லும். இதில், 18 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதி, 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai- ,Kanyakumari ,Madurai ,Chennai ,Republic Day ,Southern Railway ,Chennai Egmore ,
× RELATED தேச பக்தியும் வீரமும் தமிழர்களின்...