×

தேச பக்தியும் வீரமும் தமிழர்களின் ரத்தத்தில் கலந்துள்ளது: பிரதமர் மோடி புகழாரம்

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் என்.டி.ஏ. கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் எனக் கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். சில நாட்களுக்கு முன் பாரத ரத்னா எம்ஜிஆரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினோம். தேச பக்தியும் வீரமும் தமிழர்களின் ரத்தத்தில் கலந்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். அதிமுக பெயரையே குறிப்பிடாமல் பாஜக-என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி என பிரதமர் மோடி பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். 45 நிமிட உரையில் ஒரு இடத்தில் கூட அதிமுக என்ற வார்த்தையை பிரதமர் மோடி குறிப்பிடவில்லை.

Tags : MODI Chengalpattu ,Maduraandakathil ,D. A. ,PM Modi ,Modi ,Tamil Nadu ,India ,
× RELATED தேச பக்தியும் வீரமும் தமிழர்களின்...