×

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு

 

திருப்பூர்: திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாறு படுகை முதலாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட நிலங்களுக்கு, ஐந்து (5) சுற்றுகள் நாளை முதல் ஜூன் 8ம் தேதி வரை, 135 நாட்களுக்கு, உரிய இடைவெளிவிட்டு, 10250 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் வட்டங்களிலுள்ள நிலங்களும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை ,மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம் மற்றும் தாராபுரம் வட்டங்களிலுள்ள நிலங்களும் என ஆக மொத்தம் 94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Tags : Thirumoorthy Dam ,Tiruppur ,Aliyar ,Tiruppur district ,Palar Basin Zone I ,
× RELATED தேச பக்தியும் வீரமும் தமிழர்களின்...