×

RCH பணியாளர்கள் தற்போது ரூ.27,000 வரை சம்பளம் பெறுகிறார்கள்: சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, 2002-ல் ரூ.500/- சம்பளத்திற்கு பணியமர்த்தப்பட்ட RCH பணியாளர்கள் தற்போது ரூ.27,000/- வரை சம்பளம் பெறுகிறார்கள் என சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை (22.01.2026) அன்று போளுர் சட்டமன்ற உறுப்பினர் விவாதத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்கள். அவர் உரை வருமாறு:-

பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் போராட்டம் என்று சொல்லி, போராட்டங்களில் ஒரு பட்டியல் போட்டார். போராடியவர்களுடைய உண்மையான history-ஐ சொன்னால், அவருக்கு கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். எதிர்க்கட்சியின் கொறடா ரவி சென்ற ஏப்ரலில் சட்டமன்றத்தில், ரூ.1,500/- சம்பளத்தில் RCH – Reproductive Child Health Workers இருக்கிறார்கள், அவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தித் தர வேண்டுமென்று ஒரு கோரிக்கை வைத்தார். அந்த வேலை எப்போது வைத்தது என்றால், 2002-ல் வைத்தது.

2002-ல் யார் ஆட்சி? சட்டமன்ற உறுப்பினருக்குத் தெரியும். 2002-ல் அவர்களை எதற்கு வேலைக்கு வைத்தார்கள் என்றால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மகப்பேறுக்கு வருகிற தாய்மார்களுக்கு துடைப்பதற்கு, பெருக்குவதற்கு, கூட்டுவதற்கு என்று பகுதிநேர பணியாளர்களாக ரூ.500/- சம்பளத்தில் வைத்தார்கள். ரூ.500/- சம்பளத்தில் ஒரு குறைந்த வேலைக்கு வைத்தது என்ற ஒரு மகத்தான சாதனையை செய்த மாபெரும் ஆட்சி சட்டமன்ற உறுப்பினர் அவர்களுடைய ஆட்சி. ரூ.500/- வைத்துவிட்டு, அப்போது என்ன சொன்னார்களென்றால், இந்த ரூ.500/- 4 வருடங்கள் வேலை செய்தால் ரூ.1,000/- ஆகும் என்று சொல்லி உத்தரவு கொடுத்தார்கள்.

7 வருடங்கள் வேலை செய்தால் ரூ.1,500/- ஆகும் என்று சொல்லி உத்தரவு கொடுத்தார்கள். அதுதான் இந்த ஆட்சி வந்தவுடனே தமிழ்நாடு முதலமைச்சர் 2023-ல் அதில் 983 பேரை Select செய்து எழுத படிக்கத் தெரிந்தவர்களை District Health Society-ல் வேலைக்கு வத்து ஒவ்வொருவரும் இன்றைக்கு ரூ.27,000/- சம்பளம் வாங்குகிறார்கள்.

அதே எதிர்க்கட்சித் தலைவர் தான் தமிழகத்தின் ஊடகம் ஒன்றியல் ரூபாய் ஆயிரம் தருவது சாத்தியமற்றது என்பதை உறுதியோடு சொன்னவரும் அவர்தான். வெறும் ரூ.1,500/- சம்பளத்திற்கு பணியில் அமர்த்தியவர்கள். இன்னொன்று MRB செவிலியர்கள் 2014. 2014 யார் ஆட்சி என்று நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 2014இல் MRB செவிலியர்கள். MRB என்பது ஒரு நல்ல அமைப்பு. Medical Recruitment Board என்ற அமைப்பில் ஆட்கள் நியமனம் செய்தால் இரண்டு வருடங்களுக்கு பிறகு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஆனால் இவர்கள் எப்படி appointment Order தருகிறார்கள் என்றால், இரண்டு வருடங்கள் பணி செய்த பிறகு, செவிலியர்களின் காலி பணியிடங்கள் இருந்தால், Merit அடிப்படையில் permanent செய்யப்படும் என்கிறார்கள். அவர்களும் வேறு வழியில்லாமல் பணி செய்கிறார்கள். 2014 முதல் 2021 வரையில் 1,600 பேருக்கு மட்டுமே Vacancy Create ஆகி merit ல் பணிநிரந்தரம் செய்யப்படுகிறார்கள். அதன்பிறகு இந்த ஆட்சி வந்த பிறகு, இதுவரையில் 6000 பேர் வைத்திருக்கிறோம். கடந்த வாரம் ஆயிரம் பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் 5,000 பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தரப் போகிறோம். இவை எல்லாமே ஏற்றிவிட்டு சென்ற சுமையை சுமந்து அவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது இந்த அரசு என்பதை மன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் விவாதத்தின்போது பதிலளித்தார்.

Tags : Minister ,MLA ,Subramanian ,Chennai ,Chief Minister of ,Tamil ,Nadu ,Minister of Medicine and Public Welfare ,Legislative Assembly ,
× RELATED ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு காலையில்...