இஞ்சி பூண்டின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

நமது தினசரி உணவில் இஞ்சிப் பூண்டு விழுதின் பங்கு தவிர்க்க முடியாதது. அவ்வாறு நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் இஞ்சிப்பூண்டின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.

பூண்டு

*பூண்டு நோயெதிர்ப்புத்திறன் மிக்கது. ரத்தத்திலுள்ள சர்க்கரையைக் குறைக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். புழுக்களைக் கொல்லும். சீரணத்தை ஏற்படுத்தும்.

*ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும், இதயக் கோளாறுகள் இருந்தாலும் குணப்படுத்தலாம். இது ஒரு சக்தி மிகுந்த ஆயுதம் எனலாம்.

*பூண்டுப் பற்கள் 10 எடுத்து நசுக்கி அதில் சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர வேண்டும். புற்றுநோய் அபாயம் ஏற்படாது.

*இதயத்தினுள்ளே ரத்தம் கட்டுவதைத் தடுக்கும்.

*மூச்சுக்குழாய் அடைப்பு ஆஸ்துமாவுக்கு நல்ல மருந்தாகும்.

*சிறுகுடலில் ஏற்படும் கோளாறுகளைப் போக்கும்.

*காசநோயுள்ளவர்களின் நுரையீரலைக் காக்கும் தன்மை கொண்டுள்ளது. அதனால் தீராத இருமலைக் குறைத்துவிடும். சளியை வெளியேற்றும்.

*தொண்டைப் புண்களை ஆற்றும். முடக்குவாதம், மூட்டுவலி வீக்கம், நரம்புப் பிடிப்பு, தோல் வியாதிகளைக் குணப்படுத்தும்.

*வெட்டுக் காயங்கள், புண்களில் பூண்டுச் சாற்றைப் பூசினால் கிருமிகள் தொற்றாது. சீழ்பிடிக்காது.

*சொத்தைப் பல்லுக்கு மருந்தாகும்.

(நசுக்கிப் பல்லில் வைக்கவும்)

*காதுவலிக்கு காதின் பின்னால் பூண்டு சாற்றைத் தடவினால் வலி குறையும்.

*தொற்றுநோய் பரவும் சமயங்களில் 4 பூண்டுப் பற்களை நசுக்கித் தண்ணீருடன் கலந்து கொதிக்க வைத்து 3 வேளைகள் சாப்பிட்டு வந்தால் நோய் தொற்றாது.

இஞ்சி

*அஜீரணம், அடிவயிற்றுவலி, ஏப்பம், வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும். இஞ்சிக் கஷாயமிட்டுக் குடிக்கலாம்.

*சீதளம், சளி, இருமல் ஏற்பட்டால் இஞ்சிக் கஷாயம் தினமும் 2 வேளைகள் குடித்து வர குணமாகும்.

*வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை நீக்கி, செரிமானத்தை சீராக்குகிறது.

*கர்ப்ப கால குமட்டல், பயணத்தின்போது ஏற்படும் குமட்டல் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய குமட்டல் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது.

*இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் (Gingerol) போன்ற சேர்மங்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இது மூட்டுவலி (Arthritis), தசைவலி போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது.

*சளி, இருமல் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு ஒரு சிறந்த நிவாரணம் அளிக்கிறது.

*உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

*கொழுப்பைக் குறைத்து ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

தொகுப்பு: தவநிதி

Related Stories: