×

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலை தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கக் கோரிய வழக்கு : மத்திய அரசு, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி : திருப்பரங்குன்றம் முருகன் கோயிலை தொல்லியல் துறையிடம் ஆய்வுக்கு ஒப்படைக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு, தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து தர்ம பரிஷத் பெயரில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். திருப்பரங்குன்றம் கோயிலிலிருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் எனவும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நிரந்தரமாக தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : THIRUPARANGURAM MURUGAN TEMPLE ,ARCHEOLOGICAL ,SUPREME COURT ,CENTRAL GOVERNMENT ,TAMIL ,Delhi ,Tamil Nadu Government ,Tiruparangunram Murugan Temple ,Archaeological Department ,K. ,Madurai ,Hindu Dharma Parishad ,K. Ramesh ,
× RELATED மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் 33 கேள்விகள்: அரசிதழ் வெளியீடு