×

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு வினாத்தாள் க்யூ ஆர் கோடில் பிரபல ஹாலிவுட் பாடல்

புதுடெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 12ம் வகுப்பு கணிதவியல் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் இடம்பெற்றுள்ள க்யூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது, யூடியூப் பக்கத்தில் பிரபல ஹாலிவுட் பாடல் ஒளிபரப்பானது. லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் இந்த தேர்வு வினாத்தாளில் இத்தகைய சிக்கல் எழுந்தது, சிபிஎஸ்இ கல்வி தரத்தின் மீதான கேள்வியை எழுப்புவதாக சமூக வலைதளங்களில் பலரால் கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகத்தின் தரப்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘12ம் வகுப்பு கணிதவியல் தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில் இடம் பெற்றுள்ள க்யூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது பாடல் ஒலித்தது என்பதை சிபிஎஸ்இ உறுதி செய்துள்ளது. இது வருந்தத்தக்க ஒன்று தான். இருப்பினும் வரும் காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யும் விதமாக போதிய நடவடிக்கையை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CBSE ,Hollywood ,New Delhi ,YouTube ,
× RELATED பாகிஸ்தானில் தீவிர சிக்கன நடவடிக்கை...