×

எதிர்க்கட்சியை போன்று ஆளுநர் விமர்சிப்பது ஏற்க முடியாது: பொன்குமார் கடும் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கம்போல் இந்த ஆண்டும் சட்டசபைக்கு வந்து, பிரச்னைகளை ஏற்படுத்திவிட்டு, வெளிநடப்பு செய்துள்ளார். ஜனநாயகத்தின் மிக முக்கிய அங்கமாக விளங்கக்கூடிய சட்டமன்றத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து கேலிக்கூத்தாகி வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

இதை ஒன்றிய அரசும், பிரதமர் மோடியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இந்திய ஜனநாயகத்திற்கு பேராபத்தாகும்.ஒரு ஆளுநர் எதிர்க்கட்சியை போன்று சகட்டு மேனிக்கு மாநில அரசை விமர்சிப்பது எந்த அளவிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். எனவே பிரதமர் மோடி உடனடியாக தமிழ்நாட்டு ஆளுநரை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Governor ,Ponkumar ,Chennai ,Tamil Nadu Farmers' Workers' Party ,R.N. Ravi ,Assembly ,
× RELATED சத்துணவு அமைப்பாளர்கள், பகுதி நேர...