திமுக ஆட்சி அமைந்ததும் நத்தத்தில் அமையும் அரசு கலை கல்லூரி ஆண்டிஅம்பலம் எம்எல்ஏ உறுதி

நத்தம், ஜன. 29: நத்தத்தில் மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. ஆண்டி அம்பலம் எம்எல்ஏ தலைமை வகித்து பேசுகையில், ‘நத்தம் பகுதியில் கண்மாய் குடிமராமத்து பணிகள் முறையாக நடக்கவில்லை. எம்பி வேலுச்சாமி இப்பணிகளை ஆய்வு செய்ய வந்தபோது அதிகாரிகள் ஒத்துழைக்க மறுத்து விட்டனர். நத்தம் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க கோரி சட்டமன்றத்தில் பலதடவை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றவில்லை.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். அப்போது நீண்டநாள் கோரிக்கையான நத்தம் பகுதிக்கு அரசு கலைக்கல்லூரி அமைவது உறுதி’ என்றார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் விஜயன், தலைமை கழக பேச்சாளர் கவிநிலவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார், பழனிச்சாமி, மோகன், தர்மராஜன், நகர செயலாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பதுருஸ்மான், மாவட்ட பிரதிநிதிகள் இஸ்மாயில், கதிரவன், சாணார்பட்டி ஒன்றிய தலைவர் பழனியம்மாள், துணை ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், குப்புச்சாமி, முருகேசன், சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடக்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

Related Stories: