- பாஜக
- வீர முத்தரையர் சங்கம்
- திமுக
- சென்னை
- வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம்
- தமிழ்தேசம் கட்சி
- கே.கே. செல்வகுமார்
- அண்ணா அரியலையா
- முதல் அமைச்சர்
சென்னை: வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம்-தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே. செல்வகுமார் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: வருகிற ஜனவரி 25ம் தேதி தமிழர் தேசம் கட்சி நடத்துகின்ற அரசியல் அதிகாரம் மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழை முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளோம். மதசார்பற்ற ஜனநாயக கூட்டணிக்கு தமிழ் தேசம் கட்சி சார்பில் முழு ஆதரவை தெரிவித்துள்ளோம். தமிழக பாஜவினர் தமிழர் தேசம் கட்சிக்கும், வீர முத்தையர் முன்னேற்றம் சங்கத்திற்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
ஆதலால் திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறோம். மீனவர்களுக்கான தேசிய வாரியம் போட்டு தருவதாக தெரிவித்தனர். தொடர்ச்சியாக வலியுறுத்தியும் அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. தொடர்ச்சியாக அவர்கள் வேலை செய்தும் எங்களுக்கு அங்கு மரியாதை இல்லை. எங்களுக்கு அளித்த குறைந்தபட்ச வாக்குறுதியை கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. எங்கள் அழைப்பை கூட ஏற்கவில்லை. ஆதலால் அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம். திமுக கூட்டணி கட்சிக்கான வெற்றிக்காக முழு வீச்சில் நாங்கள் பணியாற்றுவோம். தேர்தலில் போட்டியிடுவதற்காக தொகுதிகளை கேட்டிருக்கிறோம். போட்டியிட வாய்ப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
