×

நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க.வுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: நடிகர் விஜய் தலைமையிலான தவெக கட்சிக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 2024 பிப்ரவரி 2ம் தேதியில் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். இந்த நிலையில் தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு சின்னங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக தவெக தரப்பில் ஆட்டோ, கால்பந்து, கிரிக்கெட் பேட், விசில் ஆகியவைகளை விருப்பச் சின்னங்களாக சமர்பித்திருந்தனர். இந்த நிலையில் த.வெ.கவிற்கு விசில் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதே போல் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மைய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

* விசில் போடுவோம் விஜய் உற்சாகம்
நடிகர் விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து நேற்று தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு: தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாக திகழும் தவெகவின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணைய ம் விசில் சின்னத்தை ஒதுக்கீடு செய்திருப்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம். இதற்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி. தவெக ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்து கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும், உத்வேகமும் என்பதே இயற்கையும், இறைவனும் அளித்திருக்கும் பரிசு. வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றிபெறுவோம். விசில் போடுவோம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

Tags : Vijay ,Commission ,NEW DELHI ,ELECTION COMMISSION ,DAVEKA PARTY ,Tamil Nadu Victory Club ,Electoral Commission ,
× RELATED புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன்...