உழவர் ஆர்வலர் குழுக்களுக்கு வேளாண் தொழில்நுட்ப பயிற்சி

திருவையாறு. ஜன.28: திருவையாறு வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணையத் திட்ட விவசாயிகள் தொழில் நுட்ப பயிற்சி உழவர் ஆர்வலர்குழு, உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பயிற்சி கண்டமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. உதவி வேளாண்மை அலுவலர் உமாபிரியா வரவேற்றார். பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் குமரன் தலைமை வகித்து பேசுகையில், இத்திட்டத்தின் நோக்கமானது சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து குழுக்களாக செயல்பட்டு உழவர் ஆர்வலர் குழுவாக அமைத்து பின்னர் உழவர் உற்பத்தியாளர் குழுக்களாக மாறுவதன் மூலம் உயர் தொழில் நுட்பங்கள் நிதி ஆதாரத்திற்கான வழிவகை பெறுதல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட விளைபொருள் விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குதல்,

மேலும் இக்குழுவிவசாயிகள் ஒருங்கிணைந்து இடுபொருள்களை கூட்டாக குறைந்த விலையில் கொள்முதல் செய்தல், பண்ணைக் கருவிகளை பயன்படுத்துதல் சிக்கன நீர் பராமரிப்பு மேற்கொள்ளுதல் மற்றும் மதிப்புக்கூட்டி விளைபொருள்களை விற்பனை செய்து வருமானத்தை பெருக்கிகொள்ளலாம் என்றார். எம்.எஸ்.சாமிநாதன் ஆராய்ச்சி நிலைய ஆராச்சியாளர் சுதாகர் ஒருங்கிணைந்த கூட்டுபண்ணையம் மற்றும் புதிய நெல் ரகங்கள் ஒருங்கிணைந்த பயிர்மேலாண்மை ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை தொழில்நுட்பம் பற்றியும், வேளாண்மை அலுவலர் புனிதா ஒருங்கிணைந்த உர மேலாண்மை மற்றும் நுண்ணூட்ட மேலாண்மை தொழில்நுட்பம் பற்றியும், துணை வேளாண்மை அலுவலர் குணசேகரன் ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மை மற்றும் பராம்பரிய ரகங்கள் பற்றி தொழில் நுட்பம் பற்றியு பயிற்சி அளித்தனர்.

Related Stories: