வடசென்னை வளர்ச்சித் திட்டம்.. எளிய மக்களின் ஏற்றம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு!!

சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வடசென்னை வளர்ச்சித் திட்டம் எளிய மக்களின் ஏற்றம்! சாலையோரங்களிலும் கால்வாய் ஓரங்களிலும் வசித்து வந்த மக்களுக்கு நிலையான குடியிருப்பை அளிக்க 776 முதல்வர் நகர்ப்புறக் குடியிருப்புகள்-ஐத் திறந்து வைத்தேன். வளாகத்திலேயே முதல்வர் படைப்பகம், நூலகம், திறந்தவெளி அரங்கம், உடற்பயிற்சிக் கூடம், நியாய விலைக் கடை, அங்கன்வாடி மையம், CCTV கண்காணிப்பு எனத் தரமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் இந்தக் குடியிருப்புகளை உருவாக்கியுள்ளது நமது திராவிடன் மாடல் அரசு.வால்டாக்ஸ் சாலைப் பகுதியில் மேலும் 144 புதிய குடியிருப்புகளைக் கட்டும் பணிகளையும் தொடங்கி வைத்தேன்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: