- தில்லி உயர் நீதிமன்றம்
- BJP MLA
- உன்னாவோ
- புது தில்லி
- பாஜக
- சட்டமன்ற உறுப்பினர்
- குல்தீப் செங்கர்
- உன்னாவ், உத்தரபிரதேசம்
புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் கடந்த 2017ல் பாஜ முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கர் தன்னிடம் வேலை கேட்டு வந்த 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவரது தந்தை லாக்கப் மரணத்திலும் குற்றம்சாட்டப்பட்டார். இதில் பலாத்கார வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மரண வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் வரை, செங்கரின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி சமீபத்தில் தீர்ப்பளித்தது. இது சர்ச்சையான நிலையில் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மரண வழக்கில் விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி செங்கர் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ரவீந்தர் துதேஜா நேற்று தள்ளுபடி செய்தார்.
