×

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

சேலம், ஜன.20:சேலம் கோரிமேடு அரசு ஐடிஐயில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 21ம் தேதி (நாளை) நடக்கிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட திறன்பயிற்சி துறையின் உதவி இயக்குநர் சந்திரா வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் கோரிமேடு அரசு ஐடிஐயில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 21ம் தேதி (நாளை) நடக்கிறது. இதில் சேலத்தில் உள்ள அரசு, பொதுத்துறை தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்களில் காலியாக இருக்கும் தொழில்பழகுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த முகாமில் ஐடிஐ முடித்த மாணவர்கள், தங்களுக்கு உரிய தொழிற்பழகுநர் இடங்களை தேர்வு செய்து, உயர்த்தப்பட்ட உதவித்தொகையுடன் தொழிற்பழகுநர் பயிற்சி பெறலாம். காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறும். பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு, தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் ஒன்றிய அரசால் வழங்கப்படும். எனவே, ஐடிஐ பயிற்சி முடித்து தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காத மாணவர்கள் அனைவரும் தங்களது அனைத்து அசல், நகல் சான்றிதழ்கள் மற்றும் சுயவிவரக்குறிப்புடன் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Salem ,Salem Korimedu Government ,ITI ,Chandra ,Salem District Skill Training Department ,
× RELATED நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மறியல்